இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூலை 1ல் ஆனி திருமஞ்சன திருவிழா துவக்கம்

6/6/2025 2:27:27 PM
நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை ஜனாதிபதி ராம்நாத் தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. 9ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடக்கும்.ஆனி மாதத்தில் நடக்கும் ஆனித் திருமஞ்சன திருவிழா ஜூலை 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 2ம் தேதி இரவு வெள்ளி சந்திரபிரபை வாகனத்திலும், 3ம் தேதி தங்க சூர்யபிரபை வாகனத்திலும், 4ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.

5ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 7ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 8ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வேடத்திலும் சாமி வீதியுலா நடக்கிறது.9ம் தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடக்கிறது. காலை 5 மணிக்கு மேல் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் தேரில் எழுந்தருள்கின்றனர். இதனை தொடர்ந்து தனித்தனி தேர்களில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.10ம் தேதி அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. 11ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

மேலும் சில
  • ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்



  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்



  • சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்



  • மணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா



  • பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்



  • திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா



  • ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்



  • பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்



  • மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]