இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணம்

5/25/2016 3:46:01 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.எம்.சீனிவேல்(65). தேர்தலுக்கு முதல் நாளான கடந்த 15ம் தேதி இரவு இவர் திடீரென்று பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, மதுரை பீபிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்பு கே.கே.நகரில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இதனால், அவரை மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு அவர் மரணமடைந்தார்.

சீனிவேலின் சொந்த ஊர் மதுரையை அடுத்த விளாச்சேரி. அவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். சீனிவேல் சுமார் 20 வருடமாக திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர். திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 2001ல் வெற்றி பெற்ற 2006 வரை எம்எல்ஏவாக இருந்தார். தற்போது, திருநகர் வீடு கட்டுவோர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர், தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்து விட்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,932 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

 இன்று சட்டசபை கூடி, எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ள நிலையில் சீனிவேல் மரணமடைந்துள்ளார். இவரது மறைவால் சட்டசபையில் அதிமுகவின் எம்எல்ஏ பலம் 133 ஆக குறைந்துள்ளது. தற்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

மேலும் சில
  • ஜூன் 20ல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: மாணவ, மாணவிகள் குவிந்தனர்



  • மின்னணு சுங்கச்சாவடி அறிமுகம்: கியூவில் நிற்க வேண்டியது இல்லை



  • பறவை காய்ச்சல் எதிரொலி: கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு



  • பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு



  • பெரியாறு அணையை மத்திய குழு ஆய்வு: 152 அடி உயர்த்த நடவடிக்கை?



  • ஜூன் 16ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேர் தயார்படுத்தும் பணிகள் ஜரூர்



  • கொடைக்கானலில் காட்டெருமைகள் கூட்டம் : சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு



  • விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி



  • அனைத்து வங்கிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி; விவசாயிகள் வேண்டுகோள்



  • ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன்: 2ம் இடம் மாணவி சொல்கிறார்



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]