இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் அறிவிப்பு

5/25/2016 3:44:13 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமாகாவில் இருந்து வந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உட்பட 4 பேர் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் எம்பிக்களாக இருந்த ராமலிங்கம், தங்கவேலு(திமுக), நவநீதகிருஷ்ணன், ரபி பெர்னாடு, பால் மனோஜ் பாண்டியன்(அதிமுக), காங்கிரசின் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரது பதவிக்காலம் ஜூனில் முடிகிறது. இதனால் அந்த காலி இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், வக்கீல் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில் வைத்திலிங்கம், அமைச்சராக இருந்து, ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, தேர்தல் நேரத்தில் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏற்கனவே மாநிலங்களவை எம்பியாக இருந்த நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • ஜூன் 20ல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: மாணவ, மாணவிகள் குவிந்தனர்



  • மின்னணு சுங்கச்சாவடி அறிமுகம்: கியூவில் நிற்க வேண்டியது இல்லை



  • பறவை காய்ச்சல் எதிரொலி: கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு



  • பிரசவ வார்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு



  • பெரியாறு அணையை மத்திய குழு ஆய்வு: 152 அடி உயர்த்த நடவடிக்கை?



  • ஜூன் 16ல் திருவாரூர் ஆழித்தேரோட்டம் தேர் தயார்படுத்தும் பணிகள் ஜரூர்



  • கொடைக்கானலில் காட்டெருமைகள் கூட்டம் : சுற்றுலாப்பயணிகள் ரசிப்பு



  • விபத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி



  • அனைத்து வங்கிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி; விவசாயிகள் வேண்டுகோள்



  • ஐஏஎஸ் படிக்க விரும்புகிறேன்: 2ம் இடம் மாணவி சொல்கிறார்



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]