இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சென்னை தம்பதியிடம் ஓடும் ரயிலில் நகை பறித்த 2 வாலிபர்களுக்கு சிறை

5/25/2016 3:40:53 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

திருச்சி : சென்னை பழைய வண்ணாரபேட்டை தண்டலதெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (38). நகை வியாபாரி. இவரது மனைவி விஜயா அகிலா (30).புதுமண தம்பதிகள். கடந்த 18ம் தேதி திருச்செந்தூர் சென்று விட்டு சென்னை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த இவர்கள் அயர்ந்து தூங்கிவிட்டனர். ரயில் திருச்சி ஜங்ஷன் வந்ததும் விழித்து பார்த்து விட்டு மீண்டும் தூங்கி விட்டனர்.

ரயில் கரூர் மார்க்கத்தில் உள்ள புகழூர் அருகே வந்தபோது இருவரும் அணிந்திருந்த 12.5 பவுன் நகைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  புகாரின் பேரில் எஸ்பி ஆனிவிஜயா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.விசாரணையில் நாகை மாவட்டம் வேதராண்யம் அடுத்த அவரிக்காடு பகுதியை சேர்ந்த துரைமுருகன்(21), கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி கோதண்டராமபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(23) ஆகிய 2 பேரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

துரைமுருகன், சந்தோஷ்குமார் 2 பேரும் சிறிய திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட போது நண்பர்களாகி, பின்னர் வேளாங்கண்ணியில் சுற்றி திரிந்துள்ளனர். சம்பவத்தன்று திருச்சி ரயில் நிலையம் வந்து நாகர்கோவில் எக்ஸ்பிரசில் ஏறியுள்ளனர். முன்பதிவில்லா பெட்டியில் ஏதும் சிக்காததால் முன்பதிவு பெட்டிகளில் ஏறி கைவரிசை காட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • பைக் திருடிய 2 பேர் கைது



  • ரூ.14 லட்சம் கடற்குதிரையை கடத்தியவர் கைது



  • போலி நகை அடகு மோசடி : சென்னை வாலிபர் கைது



  • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துகொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது



  • பெண் கொலை: கள்ளக்காதலன் கைது



  • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பூ வியாபாரி வெட்டிக்கொலை



  • கத்தார், குவைத்தில் இருந்து கடத்தி வந்த 3 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் சிக்கியது : பெண் உள்பட 2 ‘குருவி’கள் கைது



  • பைக் பெட்டியில் 1 லட்சம் அபேஸ்



  • குரோம்பேட்டையில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை



  • மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]