பெண் கொலை: கள்ளக்காதலன் கைது
5/24/2016 4:08:37 PM
பேராவூரணி : தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் வைரவன்(45). இவரது மனைவி கூத்தாயி(43). ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. வைரவன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கூத்தாயிக்கும் அதே ஊரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் பேராவூரணி சந்தைக்கு சென்று திரும்பிய கூத்தாயி, ஆவணத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, ஜெயச்சந்திரன் தனது டூவீலரில் அவரை ஏற்றி சென்றதை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர்.
பின்னர் கூத்தாயி வீடு திரும்பவில்லை. நேற்று துலுக்கவிடுதியில் வாழைத்தோப்பில் கூத்தாயி பிணமாக கிடந்துள்ளார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை பிடித்து விசாரித்தனர்.‘கூத்தாயிக்கும் எனக்கும் தொடர்பு இருந்து வந்தது. திடீரென இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கூத்தாயியை தாக்கினேன். அதில் அவர் மயங்கி விழுந்ததும் முகத்தை அமுக்கி கொலை செய்தேன்’ என்று ஜெயச்சந்திரன் கூறிஉள்ளார். அதன் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.