சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றம் ஏன்?
5/23/2016 2:42:22 PM
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘ரெமோ’. இப்படத்தில் வெவ்வேறு கெட்டப் சேஞ்ச் செய்து நடிக்கிறார். இதற்காக ஹாலிவுட் மேக் அப் ேமன் வரவழைக்கப்பட்டிருக்கிறார். சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதால்தான் கெட்டப் சேஞ்ச் செய்கிறாரா என்று விசாரித்தபோது, இளைஞர்கள் தங்கள் காதலியை கவர்வதற்காக வெவ்வேறு கெட்டப்பில் வருவார்கள். அதுபோன்ற கதாபாத்திரத்துகாகத்தான் சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றுகிறார் என்று பட தரப்பு சொல்கிறது.பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை பி.சி.ஸ்ரீராம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸ்ரீராம்,’ரெமோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. இது சிவகார்திகேயனின் நடித்த படங்களில் சிறந்த படமாக இருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.