இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு

5/23/2016 2:34:42 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்



புதுச்சேரி: புதுவையில் 2016 சட்டமன்ற தேர்தலில் 6 முனைப் போட்டி நிலவியது. காங்கிரஸ்- திமுக ஒரு அணியாகவும், என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாமக, பாஜக, மநகூ தனித்தனியாகவும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலின்படி 344 பேர் களத்தில் நின்றனர். இவர்களில் பொதுத்தொகுதிக்கு போட்டியிட்டவர்கள் ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதியில் களமிறங்கியவர்கள் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் தொகை செலுத்தியிருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், மொத்தம் பதிவான செல்லத்தக்க ஓட்டுகளில் 6ல் ஒருபங்குக்கு மேல் ஓட்டுகளை பெற்ற வேட்பாளர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். டெபாசிட் இழந்தவர்களின் தொகை அரசின் கஜனாவுக்கு சென்றுவிடும். அதன்படி புதுவையில் போட்டியிட்டவர்களில் 80 வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ள 264 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். மொத்தம் 77 சதவீத வேட்பாளர்களின் டெபாசிட் தொகை பறிபோய் உள்ளது.

காங்கிரஸ்-திமுக கூட்டணி தலா 2 தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. என்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. அதிமுக 16 ெதாகுதியில் டெபாசிட் இழந்துள்ளது. மநகூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் 6, வி.சிறுத்தை 5, மார்க்சிஸ்ட் 4, மற்றவை 11 இடங்களிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.

இதுதவிர தனித்து போட்டியிட்ட பாமக 24, பாஜக 28 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. மேலும் பகுஜன் சமாஜ், அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, ஜனதா தளம், நாம் தமிழர், சோஷலிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளன.

மேலும் சில
  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை



  • திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு



  • செங்கல்பட்டு திமுக எம்எல்ஏவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாழ்த்து எம்.கே.தண்டபாணி பங்கேற்பு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் இடையூறாக இருந்த டிஜிட்டல் பேனர், கம்பங்கள் அகற்றம்



  • ஸ்ரீஆர்.எம்.ஜெயின் வித்யாபீடம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி



  • தூத்துக்குடி மாவட்டத்தில் டெபாசிட் பறிகொடுத்த 72 வேட்பாளர்கள்



  • பிளஸ்2 பொது தேர்வில் நடேசன் பள்ளி 99.8% தேர்ச்சி மாணவிகள் முன்னிலை



  • சாமி பல்லக்கு தூக்குவதில் அடிதடி தகராறு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]