திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா
5/23/2016 2:30:57 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் யுகாதி விழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. மண்டல தலைவர் எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மண்டல நிர்வாகிகள் ஏ.எஸ்.சுப்பிரமணியம், சந்திரசேகர், வி.எஸ்.வெங்கடேசன், மகேஷ்பாபு, சக்தி சேகர், வி.எஸ்.ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் என்.ஜி.மோகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் எம்.சக்கரவர்த்தி, திருவள்ளூர் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன் ஜஸ்வந்துக்கு, ரூ.10 ஆயிரம் பரிசினை வி.ஜி.ராஜேந்திரனும், தலா ரூ.5 ஆயிரம் பரிசினை சக்கரவர்த்தியும், பஜ்ரங் பொறியியல் கல்லூரி தாளாளர் எம்.ஜி.பாஸ்கரும் வழங்கினர். இதில், மாநில நிர்வாகிகள் வி.வெங்கட விஜயன், வேதகிரி, வி.எம்.பிரபாகர், எம்.ஜி.பாஸ்கர், ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.