இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இளம் வயதில் 10 ஆயிரம் ரன்கள் சச்சினின் சாதனையை உடைக்கிறார் குக்

5/5/2025 2:24:53 PM
மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு தமிழ் மொழியில் நடத்தப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வேண்டுகோள் அமைச்சர் செல்லூர் ராஜூ நண்பர் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

லண்டன்: இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் ஹெட்டிங்கிலி லீட்சில் வரும் 19ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் குக், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது. சச்சின் டெண்டுல்கர் தனது 10 ஆயிரமாவது டெஸ்ட் ரன்னை, கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது கடந்தார். அப்போது அவருக்கு வயது 31 ஆண்டுகள் 10 மாதங்கள் மட்டுமே. இதன் மூலம் மிக இளம் வயதில், 10 ஆயிரம் ெடஸ்ட் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்தார்.

இதனிடையே குக் தற்போது டெஸ்ட்டில் 9,964 ரன்களை குவித்துள்ளார். 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 36 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவர் வரும் டிசம்பர் 25ம் தேதிதான் தனது 32வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிலையில் இந்த 36 ரன்களை லீட்ஸ் டெஸ்டில் குக் எடுக்கும் பட்சத்தில், மிக இளம் வயதில் 10 ஆயிரம் டெஸ்ட் ரன்கள் என்ற சச்சினின் சாதனையை உடைத்து விடுவார். ஏறத்தாழ சச்சினுக்கு 5 மாதங்களுக்கு முன்பே இந்த சாதனையை குக் படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் 10 ஆயிரம் டெஸ்ட் ரன்களை கடக்கும் முதல் இங்கிலாந்து வீரர், சர்வதேச அளவில் 12வது வீரர் என்ற சாதனைகளும் அவர் வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பயிற்சியாளர் மவுரெஸ்மோவை பிரிந்தார் ஆன்டி முர்ரே



  • ஒழுக்கத்தில் எவ்வித சமாதானமும் கிடையாது பாக்.புதிய பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அதிரடி



  • குஜராத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ததால் தோல்வியடைந்தோம் பியூஸ் சாவ்லா பேட்டி



  • ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது பெங்களூர் இறுதி கட்ட ஓவர்களில் டிவில்லியர்சை போல் யாராலும் சிறப்பாக செயல்பட முடியாது கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டு



  • 85 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபாரம் சன்ரைசர்ஸ் பந்து வீச்சு வலுவானது என அனைவருக்கும் தெரியும் ஆட்டநாயகன் நெஹ்ரா பேட்டி



  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நிஷிகோரியை வெளியேற்றினார் ஜோகோவிச்



  • பாக். பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் நியமனம்



  • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் இலங்கை கேப்டன் மேத்யூஸ் நம்பிக்கை



  • குஜராத்தை சாய்த்து சன்ரைசர்ஸ் அபாரம் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு காரணம் ஆட்டநாயகன் புவனேஸ்வர்குமார் பேட்டி



  • பாக். கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ஆஸி.யின் ஸ்டுவர்ட் லா மறுப்பு



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]