இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊழலால் தமிழகம் பின்தங்கி விட்டது வெங்கையா நாயுடு பேச்சு

5/2/2025 3:42:49 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

நெல்லை: ஊழலால் தமிழகம் மிகவும் பின்தங்கி விட்டது என்று நெல்லையில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  வெங்கையா நாயுடு பேசினார்.பாஜ சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நெல்லை டவுன் தேரடித் திடலில் நடந்தது. இதில்  மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசியதாவது: பட்டிமன்றம் போல் ஆரோக்கியமான விவாதம் நடப்பதற்கு பதிலாக  எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஊழலால் தமிழகம் பின் தங்கி விட்டது.  பலமுறை ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்னரும் தமிழகத்தில் மின்வெட்டு, ஏழ்மை ஒழியவில்லை. தரமான கிராமச்சாலைகள்  இல்லை. மருத்துவமனையோ, தேவையான டாக்டர்களோ, மருந்துகளோ இல்லை.

ஏழைகளுக்கு நல்ல வசிப்பிடம் இல்ைல. தேர்தல் வந்தால் தமிழகத்தில் இலவசங்களை இனிப்பு மிட்டாய் போல்  வழங்குகின்றனர். இவை நிரந்தரமானவை அல்ல. மோடி அறிவித்த கங்கை - காவிரி இணைப்பு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி  திட்டங்களே நிரந்தரமானவை. இதேபோல் ராதாபுரத்துக்கு தாமிரபரணியிலிருந்து வெள்ளநீர் வடிகால் திட்டமும், மானூர்  பள்ளமடை குளத்திற்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டு செல்லும் திட்டமும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக  செயல்படுத்தப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 5 கோடி ஏழைகள் இலவச காஸ் சிலிண்டர் பெறுவார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முழுவதும்  மின்வெட்டு இருக்காது. எனவே, இலவசங்கள் என்ற பெயரால் அறிவிக்கப்படும் தற்காலிக திட்டம் வேண்டுமா அல்லது நிரந்தர  திட்டம் வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.லஞ்சம் அதிகம்முன்னதாக நெல்லை  பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில்,  ‘நாடு முன்னேற்றம் அடைய பல நல்ல திட்டங்களை மோடி தந்துள்ளார். வறுமை, ஊழல், லஞ்சம், மின்சாரம் துண்டிப்பு,  வேலையின்மை ஆகியவை தமிழகத்தில் அதிகமாக உள்ளன. இந்தியாவில் இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லை. அவர்களை  ஒரு கட்சியாக கருதவேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]