மக்களை வதைக்கிறார் ஜெ. சந்திக்கிறார் கருணாநிதி கனிமொழி எம்.பி. பேச்சு
5/2/2025 3:40:44 PM
புதுக்கோட்டை: திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, புதுக்கோட்டை திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசை ஆதரித்து பேசியதாவது:சொன்னதை செய்பவர் கருணாநிதி. ஜெயலலிதா வானூர்தியில் வந்து அவர் வரும் இடத்திற்கு மக்களை வரவழைத்து வதைப்படுத்தி மக்களை சந்திக்கிறார். ஆனால், திமுக தலைவர் கருணாநிதி மக்களை அவர்கள் இருக்கும் பகுதிக்கு ஒரு சாதாரண தொண்டனை போல் வந்து சந்தித்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட ஏ.சிக்களை வைத்து ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவ்வாறு கனிமொழி பேசினார்.
அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு அறந்தாங்கி பஸ் நிலையம் அருகிலும், ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு ஒத்தக்கடை கிராமத்திலும் வாக்குகள் கேட்டு கனிமொழி எம்.பி பேசுகையில், ‘ரேஷன் கடைகளுக்கு 1ம் தேதி சென்றாலும், 20ம் தேதி சென்றாலும் எந்த பொருளும் இல்லை என்றுதான் கூறுகின்றனர். மேலும் புதிய ரேஷன் கார்டுகள் யாருக்காவது வழங்கியது உண்டா? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு ரேஷன் பொருட்கள் யாரும் ஏமாற்ற முடியாத அளவிற்கு பாக்கெட்டுகளில் வழங்கப்படும்’ என்றார்.