ஆதம்பாக்கத்தில் திமுக பிரசாரம் நங்கநல்லூரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன் தா.மோ.அன்பரசன் உறுதி
5/2/2025 3:06:37 PM
ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று மாலை ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், ஆண்டாள் நகர், நங்கநல்லூர் இந்திரா நகர், ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.திறந்த ஜீப்பில் தா.மோ.அன்பரசனுடன் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் திறந்த ஜீப்பில் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.பொதுமக்களிடம் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
ஆதம்பாக்கம்-வேளச்சேரி பகுதிகளுக்கு இடைப்பட்ட தில்லை கங்கா நகரில், நான் அமைச்சராக இருந்தபோது ரூ. 122 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. அங்கு தரமான தார்சாலைகள் அமைக்கப்பட்டது.தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதைக்கு இடையூறாக இருந்த பகுதிகள் அகற்றப்பட்டு, அங்கு தார்சாலை அமைக்கப்பட்டது. என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால், இப்பகுதியில் மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்.இவ்வாறு தா.மோ.அன்பரசன் கூறினார்.
வாக்கு சேகரிப்பின்போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன், எஸ்.ரத்தினம், பகுதி பிரதிநிதிகள் சுதாகரன், சுப்புராஜ், பாபு, வெங்கடேசன், அவைத்தலைவர் ஜெயக்குமார், குணசேகரன், சேது செந்தில் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.