இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சால் அண்ணாநகர் தொகுதி மக்களிடம் எழுச்சி

5/2/2025 3:03:26 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

அண்ணாநகர்: அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே. மோகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசிச் சென்ற பிறகு அத்தொகுதி மக்கள்  மத்தியில் புது எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறியது:அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை  ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, அண்ணாநகர் தொகுதிக்கென தனி தேர்தல் வாக்குறுதிகளை கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன்  ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றார்.அண்ணாநகர் அரசு பொதுமருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உயர் ஆராய்ச்சி மருத்துவ மையமாக உருவாக்கப்படும்.  இளம் பெண்களின் கல்வி ஆர்வத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு, இத்தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி துவக்கப்படும்.

அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் சமுதாய நலக்கூடங்கள், தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இளைஞர் தொழிற்பயிற்சி  மையங்கள், மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு என தனியாக சிறப்பு பள்ளி நிறுவப்படும். இத்தொகுதியில் நியாய விலை கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து  தடையற்ற பொருள் விநியோகம் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.அண்ணாநகர் தொகுதியை தனி தாலுகாவாக பிரித்து நிர்வாகத்தை  எளிமைப்படுத்துவதோடு, மக்களுக்கான சேவை விரிவுபடுத்தப்படும். மழை வெள்ள நீர் வடிகால்கள் சீரமைக்கப்பட்டு, வெள்ளத்தடுப்பு பணிகளில் கூடுதல்  அக்கறை செலுத்தப்படும் என்றார். எங்கள் பகுதி பிரச்னைகள் பற்றி பேசியது ஸ்டாலினுக்கும், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கும்  உள்ள அக்கறையை காட்டுகிறது. எனவே, எங்களது முழு ஆதரவையும் அவர்களுக்கு வழங்கிட உள்ளோம்.இவ்வாறு கூறினர்.

மேலும் சில
  • திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை



  • மு.க.ஸ்டாலின் 3ம் கட்ட பிரசாரம், பொதுக்கூட்டம் விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம்



  • ரேஷன் பொருட்கள் ஒரே நாளில் கிடைக்க செய்வேன் ராயபுரம் தமாகா வேட்பாளர் பிஜூ சாக்கோ வாக்குறுதி



  • வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டுக்கு குடும்பத்துடன் வர வேண்டும் என்.டி.மோகன் அழைப்பு



  • அலங்காநல்லூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு



  • இரண்டாவது நாளாக 3 சிறப்பு ரயில்கள் மூலம் 3,000 துணை ராணுவத்தினர் இன்று சென்னை வந்தனர்



  • மணல் விற்பனையில் அதிமுக அரசு ரூ. 20,000 கோடி கொள்ளை அமித்ஷா பரபரப்பு குற்றச்சாட்டு



  • அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு வீரவாள் மக்கள் உற்சாக வரவேற்பு



  • பிரசாரம் செய்தபோது திருநாவுக்கரசர் மயங்கி விழுந்தார்



  • புதுப்பேட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடத்தில் ஆட்டோ நகரம் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் உறுதி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]