பெண்ணிடம் 12 பவுன் பறிப்பு
5/2/2025 3:02:56 PM
ஆலந்தூர்: சென்னை நங்கநல்லூர், லட்சுமி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் அரிகரன் (70). இவரது மனைவி முத்துலட்சுமி (68). இருவரும் இன்று காலை லட்சுமி நகர் பகுதியில் உள்ள தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் வந்த 2 பேரில் ஒருவன் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தான். முத்துலட்சுமி சத்தம் போட்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதற்குள், முத்துலட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை 2 வாலிபர்களும் பறித்துக்கொண்டு மோட்டார் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர்.