7 கடைகளுக்கு சீல்
5/2/2025 3:01:24 PM
துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சியின் 15-வது மண்டலம், 192-வது வார்டுக்கு உட்பட்ட நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு ரேஷன் கடை உட்பட 7 கடைகள் உள்ளன. இக்கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கட்டிடத்தை இடிக்க வசதியாக 7 கடைகளையும் காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.இதை எதிர்த்து 7 கடைக்காரர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். 7 கடைகளும் 30.4.2016-க்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும், வளாகத்தில் இருந்த கடைக்காரர்கள் காலி செய்யவில்லை.இந்நிலையில், இன்று காலை 15-வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் கடைகளை காலி செய்ய அறிவுறுத்தினர். ஆனால், கடைக்காரர்கள் கடைகளை காலி செய்ய மறுத்துவிட்டனர். ஆனால் வியாபாரிகளின் எதிர்ப்பை மீறி, வளாகத்தில் உள்ள 7 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துவிட்டு சென்றனர்.