வாலிபர் தற்கொலை
5/2/2025 2:28:22 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிட்டிபாபு மகன் ஜவகர்பாபு(38). தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது தாய் கலாவதி(63). இவர் உடல்நலக் குறைவால் கடந்த 28ம் தேதி இறந்தார். தாய் இறந்த துக்கத்தில் ஜவகர்பாபு சோகத்தில் இருந்தார். இந்நிலையில், மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். செவ்வாப்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.