செங்கையில் மே தினம் கொண்டாட்டம்
5/2/2025 2:28:00 PM
செங்கல்பட்டு: தமிழ்நாடு ஏர்கண்டிஷன் ரெப்ரிஜிரேஷன் இன்ஜினியர் அண்டு டெக்னீஷியன் யூனியன் சார்பில் மே தின கொண்டாட்டம் செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. சங்க நகர பொருளாளரும், வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான விஜயகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சலாம், நகர தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில துணைத் தலைவர் மாசிலாமணி, மே தின கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர் குலாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.செங்கல்பட்டு மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி சிங்கபெருமாள் கோவிலில் நடந்தது. சங்க செயலாளர் சீனு (எ) சிவனேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் சங்க தலைவர் உதயகுமார், மே தின கொடியேற்றி, 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.