இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

குறைவான கூலி உயர்வுக்கு எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு ரூ. 5 அனுப்பிய கிராம மக்கள் ஜார்கண்டில் பரபரப்பு

5/2/2025 2:21:38 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

லதேகார்: ஜார்கண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.5 சம்பள உயர்வு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ரூ.5 ஐ பிரதமர் மோடிக்கு தபாலில் அனுப்பி வைத்து போராட்டம் நடத்தினர்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஜார்கண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூலியை ரூ.162ல் இருந்து ரூ.167 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜார்கண்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வெறும் ரூ.5 உயர்த்தி எங்களை அவமதித்துள்ளது. எனவே அந்த ரூ.5 மத்திய அரசுக்கு நாங்கள் தருகிறோம் என லதேகார் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  ரூ.5ஐ பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு தபாலிலும் அனுப்பி வைக்கும் போராட்டத்தையும் நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மற்ற மாநிலங்களில் ஊரக வேலை திட்டத்தில் கூடுதல் கூலி கொடுக்கும் போது ஜார்கண்டில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்களை அவமதிப்பது போல உள்ளது. கடுமையான வறட்சி சூழலில் இந்த கூலியை கொண்டு ஒரு குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கடந்த 3 மாதங்களாக ஊரக வேலை திட்டத்தில் கூலி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், உ டனடியாக இதை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் முதல்வர் ரகுபர்தாஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு ரூ.5 மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. தற்போது ஜார்கண்டில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் பலி



  • சர்ச்சையில் சிக்கியுள்ள அகஸ்டாவெஸ்ட் லேண்டிடம் ராஜஸ்தான் பாஜ அரசு ஹெலிகாப்டர் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை காங். வலியுறுத்தல்



  • அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8ல் பிரதமர் மோடி உரை



  • ஈகுவடாரில் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 646 ஆனது



  • முதல்வன் பட பாணியில் உத்தரகண்டில் ஒரு நாள் முதல்வராக செயல்பட்ட ஹரீஷ் ராவத் 11 திட்டங்களுக்கு அனுமதி; 2 அமைச்சரவை கூட்டங்கள்



  • சீக்கிய தலைவர் பாக்.கில் சுட்டுக் கொலை



  • சிரியாவில் விமான தாக்குதல்: 18 பேர் பலி



  • நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி



  • ஏமன் உள்நாட்டு போர் அமைதி பேச்சுவார்த்தை தொடக்கம்



  • பிரபல பாப் பாடகர் மர்ம மரணம்



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]