மே 4ல் நாகர்கோவிலில் அமித்ஷா பிரசாரம்
5/2/2025 2:14:09 PM
நாகர்கோவில்: அகில இந்திய பா.ஜ., தலைவர் அமித்ஷா வரும் 4ம் தேதி நாகர்கோவிலில் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜ போட்டியிடுகிறது. பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜ அகில இந்திய தலைவர் அமித்ஷா பேசுகிறார்.