இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கால்பந்து மைதான கட்டுமான பணியில் 3வது இந்தியர் பலி விசாரணை நடத்துகிறது கத்தார்

5/2/2025 2:11:36 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

தோஹா: 2022ம் ஆண்டு பிபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் நடக்கிறது. இதன் மூலம் உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை கத்தார் பெறுகிறது. இதைெயாட்டி அங்கு கால்பந்து மைதானங்களின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும், நல்ல தங்கும் வசதி இல்லாதது உள்பட அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் புகார் உள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச மன்னிப்பு சபை, கத்தாரை எச்சரிக்கை செய்தது. இதனிடையே கத்தாரில் கால்பந்து மைதான கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றனர்.

தோஹாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்பயாட் மைதானத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த தொழிலாளர் ஜலேஸ்வர் பிரசாத் (48) கடந்த புதன்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுமான பணிகளில் கடந்த 6 மாதங்களில் உயிரிழக்கும் 3வது இந்தியர் ஜலேஸ்வர் பிரசாத். இது குறித்து உலக கோப்பை கால்பந்து தொடர் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியட்டுள்ள அறிக்கை:

அல் கோர் மருத்துவமனையில் ஜலேஸ்வர் பிரசாத் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக மருத்துவனை தெரிவித்துள்ளது. இங்குள்ள வேலைசெய்யும் சூழ்நிலைகள் காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • மனைவியின் கள்ளக்காதலன் சரமாரியாக வெட்டி கொலை: அரசு பஸ் டிரைவர் கைது



  • வாக்கிங் சென்ற மூதாட்டியின் 10 சவரன் செயின் பறிப்பு



  • ஸ்டிக்கர்கள் எடுத்து சென்ற அதிமுக பிரமுகர் கைது



  • விபத்தாக பதிவு செய்த வழக்கில் திருப்பம் ஆட்டோ டிரைவர் எரித்து கொலை



  • டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை



  • அம்பத்தூரில் நள்ளிரவில் பரபரப்பு : பெண்கள் விடுதியில் புகுந்து செல்போன், செயின் பறிப்பு



  • கால் சென்டர் உரிமையாளருக்கு அடி உதை விசி பிரமுகர், டிரைவர் கைது



  • 3 பெண்களை கட்டிப் போட்டு டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை



  • மனைவியின் கள்ளக்காதலன் சரமாரியாக வெட்டி கொலை : அரசு பஸ் டிரைவர் கைது



  • திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]