இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

6வது தோல்வியை சந்தித்தது புனே பேட்டிங்கில் தடுமாறி விட்டோம் டோனி விரக்தி

5/2/2025 2:10:48 PM
திமுக ஆட்சி அமைந்தால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கருணாநிதி அறிக்கை சொத்து குவிப்பு மேல் முறையீடு வழக்கு சொத்து கணக்குகளில் முரண்பாடு ஜெ. தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம்

புனே: ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் பின் முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சவுரப் திவாரி 57 (45 பந்துகள், 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவன் ஸ்மித் 45 ரன் (23 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3, மெக்கிளனகன், ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட்  வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 85 (60 பந்துகள், 8 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஸ் பட்லர் 27 ரன் (17 பந்துகள், 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புனே தரப்பில் டிண்டா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். 8வது போட்டியில் விளையாடிய புனே 6வது தோல்வியையும், 9வது போட்டியில் விளையாடிய மும்பை 5வது வெற்றியையும் பதிவு செய்தது.

 வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இது நல்ல உழைப்பு என நான் நினைக்கிறேன். இருந்தாலும் நாங்கள் எதிர்பார்த்தபடி போட்டியை துவக்கவில்லை. மேலும் நாங்கள் பீல்டிங்கில் தடுமாறி விட்டோம். கேட்ச்சுகளை தவற விடுவது நல்ல விஷயம் அல்ல. ஆனால் புனே அணியை 160 ரன்களுக்குள் சுருட்டியது நல்ல உழைப்பு. ஸ்பின்னர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். பும்ராவும், மெக்கிளனகனும் டெத் ஓவர்களில் அருமையாக பந்து வீசினர். டாஸ் வெற்றி பெறுவது நமது கைகளில் இல்லை. ஆனால் சேசிங் ெசய்யும்போது, டார்கெட் நமக்கு முன்பே இருக்கும். இதனால் திட்டமிட்டு செயல்பட முடியும். நாங்கள் சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். ஆனால் பீல்டிங்கில்தான் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.

 இதனிடையே மும்பை அணியின் ஹர்பஜன் சிங்கும், அம்பதி ராயுடுவும் நேற்று களத்தில் மோதி கொண்டனர். ஒரே அணி வீரர்கள் களத்தில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ேராகித் சர்மா கூறுைகயில், இருவருமே களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். புனே அணியின் ஹேண்ட்ஸ்கோம் விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தியபோது, ராயுடுவும், அவரும் கட்டி தழுவி கொண்டதையும் காண முடிந்தது. இருவரும் முதிர்ச்சியடைந்த கிரிக்கெட் வீரர்கள். களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் என்றார்.தோல்வி குறித்து புனே கேப்டன் டோனி கூறுகையில், பத்தாவது ஓவருக்கு பிறகு நான் உள்பட அனைவரும் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. விக்கெட்டுகளை அதிகமாக இழந்து விடுவோமோ என அந்த நேரத்தில் நினைத்து விட்டோம். அதே நேரத்தில் பவுலிங் முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த போட்டியில் இருந்து, இன்னிங்ஸ் முழுவதும் நின்று விளையாடக்கூடிய பொறுப்பை சில வீரர்களிடம் அளிக்க இருக்கிறோம் என்றார்.

மேலும் சில
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோல்வி ரிஷப் பாண்ட்டின் பேட்டிங் அபாரம் டெல்லி கேப்டன் ஜாகிர்கான் பேட்டி



  • அப்ரிடி, உமர் அக்மல், ஷெசாத் பாக்.அணியில் இருந்து நீக்கம் இன்சமாமின் முதல் அதிரடி



  • காயத்தால் ஷான் மார்ஷ் அவுட்



  • மீண்டும் கிரிக்கெட் ஆட விரும்பும் காம்ப்ளி



  • கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பெங்களூர் யூசுப் பதான், ரஸ்ஸலின் பேட்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது கேப்டன் கம்பீர் உற்சாகம்



  • கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி பஞ்சாப் புதுகேப்டன் முரளி விஜய் பேட்டி



  • மாட்ரிட் ஓபனில் இருந்து செரீனா விலகல்



  • குஜராத்திடம் மீண்டும் வீழ்ந்தது புனே புதிய பந்தில் பவுலிங் செய்ய முடியாமல் தடுமாறுகிறோம் டோனி விரக்தி



  • கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைசரியான நேரத்தில் போலார்டு எழுச்சி கண்டுள்ளார் ரோகித் சர்மா பாராட்டு



  • அதிக வருவாய் கிடைக்கிறது ஐபிஎல் தொடரை வெளிநாட்டிற்கு மாற்றக்கூடாது அனில் கும்ப்ளே பேட்டி



Facebook

Twitter

3 language film from Kamal
கமல்ஹாசன் 3 மொழி படம் தொடக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]