வேட்புமனு தாக்கலில் புறக்கணிப்பு அதிமுக பெண் நகராட்சி தலைவர் கண்ணீர்
4/29/2016 2:29:18 PM
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் பிரசாரத்தில் உடன் சென்ற நகராட்சி தலைவர் அமுதாவை, தங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி முற்றுகையிட்டனர்.இதனால், குடியாத்தம் நகராட்சியில் ஓட்டு சேகரிக்க செல்லும்போது, நகராட்சி தலைவர் அமுதாவை அழைத்து செல்லக்கூடாது என அதிமுக தேர்தல் குழுவில் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று ஜெயந்தி பத்மநாபன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவர் நகராட்சி தலைவர் அமுதாவை உள்ளே அழைத்து செல்லவில்லை. இதனால் அமுதா கண்ணீர் விட்டு அழுதார்.