திருப்போரூரில் விதிகளை மீறி அதிமுக வேட்பாளருடன் நுழைந்த 100 பேர்
4/29/2016 2:16:49 PM
திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோதண்டபாணி, 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.அங்கு 100 மீட்டருக்கு முன்பே அதிமுக வேட்பாளருடன் ஐந்து பேரைத் தவிர, மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.அப்போது தேர்தல் அலுவலர் கோவிந்தராசு ‘வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும்’ என்றார். ஆனால், அதை வேட்பாளருடன் வந்தவர்கள் காதில் வாங்கவில்லை. இதனால் அவர் வேறுவழியின்றி அதிமுக வேட்பாளரிடமிருந்து வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார்.