இருளர் மக்கள் கட்சி உதயம்
4/26/2016 2:15:50 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் ‘இருளர் மக்கள் கட்சி’ நேற்று உதயமானது. அக்கட்சியின் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது. விழாவை, ஆவின் மகளிர் தலைவி ஆர்.சிவகாமசுந்தரி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கே.ரவி வரவேற்றார். கட்சி பெயர் மற்றும் கட்சி கொடியை, நிறுவனர் இரா.பிரபு அறிமுகப்படுத்தி பேசினார்.கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை விளக்கினார். தொடர்ந்து கலை நிகழ்சிகள் நடந்தன. இதில், கட்சி நிர்வாகிகள் கே.ஆர்.மூர்த்தி, பி.ராமன், கே.ஜெயராமன், ஆர்.முருகன், விஜயா, சுந்தரராஜ், பவானி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.சரவணன் நன்றி கூறினார்.