இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

உடல் எரிச்சலை தணிக்கும் மருதாணி

4/22/2016 2:16:58 PM
நாடு முழுவதும் வெயில் உக்கிர தாண்டவம் ஒடிசா, தெலங்கானாவில் 128 பேர் பலி பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பார்லி. கூட்டத் தொடர் நாளை கூடுகிறது

கோடைகாலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் கை, கால்களில் ஏற்படும் எரிச்சலை தணிப்பது, உடல் உஷ்ணத்தை குறைப்பது, பித்தத்தை சமன்படுத்துவது பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நாம் பார்ப்போம். மருதாணி இலைகள், வேப்பம் பூ, பாகற்காய் கொடியின் சாறு ஆகியவற்றை கொண்டு கோடைகால நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மருதாணியை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மருதாணி இலைகள், பனங்கற்கண்டு, பால். ஒருபிடி மருதாணி இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி பால் சேர்த்து குடித்துவர  உள் உறுப்புகளின் உஷ்ணம் தணியும். வயிறு, நெஞ்சு எரிச்சல் சரியாகும். இது வெள்ளைப்படுதலுக்கு மருந்தாகிறது. உடல் எரிச்சல் குணமாகும்.

மருதாணியை அரைத்து உள்ளங்கை, கால்களில் பூசினால் பித்தம் தணியும். உடலில் உள்ள உஷ்ணம் குறையும். வெயில் காலத்தில் வாரம் ஒருமுறையாவது மருதாணி வைத்துக் கொண்டால் நன்மை கிடைக்கும். மருதாணி என்பது அழகு சேர்ப்பது மட்டுமல்ல. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மருதாணி நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. நோய் கிருமிகளை தடுக்க கூடியது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. சுட்டெரிக்கும் வெயிலால் வியர்குரு உள்ளிட்டவை ஏற்படும். எனவே, வெப்பத்தில் நம்மை காத்துக்கொள்ள வேண்டிய அவசியம்.   வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வேப்பம் பூ, இஞ்சி சாறு, பனங்கற்கண்டு. ஒருவேளைக்கான தேனீர் தயாரிக்க சிறிது வேப்பம் பூவை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை வடிகட்டி குடித்துவர உடலில் ஏற்படும் பித்தம் சமன்படும். உடல் எரிச்சல் இல்லாமல் போகும்.பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வேப்பம் பூ குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் பித்தம் அதிகரிக்கும். இதனால் உடல் எரிச்சல் ஏற்படும். பாகற்காய் கொடியின் இலைகளை பசையாக அரைத்து, அதன் சாறை உள்ளங்கை, கால்களில் தடவும் போது எரிச்சல் சரியாகும்.

மேலும் சில
  • சோர்வை நீக்கும் மோர்



  • தோலின் கரும்புள்ளிகளை மாற்றும் வெங்காயம்



  • வியர்க்குருவை கட்டுப்படுத்தும் மாங்காய்



  • சருமத்தை அழகாக்கும் கற்றாழை



  • தோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்



  • சிறுநீர் எரிச்சலை போக்கும் முலாம் பழம்



  • புத்துணர்வு கொடுக்கும் நன்னாரி வேர்



  • வயிற்றுக் கோளாறுகளை போக்கும் இளநீர்



  • உடல் உஷ்ணத்தை தணிக்கும் கிர்ணி, வெள்ளரி



  • தலைமுடியை பாதுகாக்கும் செம்பருத்தி



Facebook

Twitter

With the lion 'pose' the actress
சிங்கத்துடன் ‘போஸ்’ கொடுத்த நடிகை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]