ஆலங்குடி திமுக வேட்பாளர் மாற்றம்
4/21/2016 3:11:50 PM
சென்னை: ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:புதுக்கோட்டை (தெற்கு) மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட ஏற்கனவே டாக்டர் கோ.சதீஷ் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது சிவ.வீ.மெய்யநாதன் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.