வியாபாரியிடம் பணம், செக் அபேஸ்
4/21/2016 3:09:05 PM
தண்டையார்பேட்டை: திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரிசந்திரன். பருப்பு மொத்த வியாபாரி. இவர், தனது குட்டி யானை வாகனத்தில் நேற்று மாலை தண்டையார்பேட்டை பவர்ஹவுஸ் அருகே லோடு ஏற்றி கொண்டு வந்தார். அப்போது, ஒரு கடையில் லோடு இறக்கிவிட்டு வந்தபோது, வாகனத்தின் முன் பகுதியில் வைத்திருந்த இருப்பு கல்லா பெட்டியை திறந்து, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 5 செக்கை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஹரிசந்திரன் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.