11ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் போலீசில் புகார்
4/21/2016 3:08:43 PM
தண்டையார்பேட்டை: சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் திவாகர் மகள் சுமதி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). பிராட்வேயில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துள்ளார். தற்போது, பிளஸ் 2 சிறப்பு வகுப்புக்கு சென்று வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற சுமதி, ஆசிரியையிடம், ‘எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர். அதற்காக அடுத்த மாதம் 21ம் தேதி எனது மாமா மகனுடன் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, அருகில் உள்ள ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யும்படி கூறியுள்ளார். உடனே அங்கு சென்று, சுமதி புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோரை வரவழைத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.