திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி
4/21/2016 2:36:34 PM
திருமலை: திருப்பதி பார்வதிபுரத்ைத சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த டிசம்பர் மாதம் நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை சேர்ந்த கிரண்குமார், நரேஷ்குமார் ஆகியோரிடம் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைகுண்டம் பகுதியில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார்.இதற்காக, கிரண்குமாரிடம் ரூ. 3 லட்சம், நரேஷ்குமாரிடம் ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன், பணியாளர் அடையாள அட்டை, தேவஸ்தான துணை செயல் அலுவலர் கையொப்பம் மற்றும் முத்திரையிடப்பட்ட ஆவணங்களை வழங்கினாராம்.இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமலை சென்று தங்களிடம் இருந்த ஆவணங்களை தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பித்தனர். ஆவணங்கள் அனைத்தும் போலியானது என அதிகாரிகள் கூறினர். அதிர்ச்சியடைந்த இருவரும் நேற்று திருப்பதி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். பாலகிருஷ்ணன் மீது இதுபோன்ற மோசடி வழக்கு அலிபிரி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.