இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

செக் மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி ஐதராபாத் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

4/21/2016 2:35:51 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

ஐதராபாத்: ரூ. 50 லட்சம் செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா குற்றவாளி என ஐதராபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடகாவை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான விமான போக்குவரத்து நிறுவனம் தற்போது தொடர் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு விட்டது. இந்நிறுவனத்துக்காக பல்வேறு வங்கிகள் கொடுத்த கடன் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் திருப்பி செலுத்தப்படாமல் உள்ளது. இந்த தொகையை வசூலிக்க வங்கிகள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதற்கிடையில் மல்லையா வெளிநாடு தப்பி சென்று விட்டார். விமானப்போக்குவரத்து நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ஐடிபிஐ வங்கியில் ரூ. 950 கோடி வாங்கி அதனை வெளிநாடுகளில் சொத்து வாங்க பயன்படுத்தியதாக மல்லையா மீது தனியாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை வெளிநாட்டில் கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் மல்லையாவின் விமான போக்குவரத்து நிறுவனம் சார்பாக ஐதராபாத் விமான நிலையத்தை பராமரித்து வரும் ஐிஎம்ஆர் ஐதராபாத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் நிறுவனத்துக்கு  ரூ. 50 லட்சம் செக் கொடுக்கப்பட்டிருந்தது. மல்லையாவின் விமானங்களை ஐதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் இது. இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இது தொடர்பாக ஐதராபாத் கோர்ட்டில் விஜய் மல்லையா மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே மல்லையாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. செக்மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும் விஜய் மல்லையா கோர்ட்டில் இல்லாத காரணத்தால் தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் சில
  • வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக்



  • குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை



  • ஏழைகளுக்கு இலவச மருத்துவ சேவை மறுப்பு: 5 தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 கோடி அபராதம்; டெல்லி ஆம் ஆத்மி அரசு அதிரடி



  • இந்திய எல்லைக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் சிறுவர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்



  • உத்தரகண்டில் கங்கை நதிக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை: திறப்பு விழாவுக்கு கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு



  • போர்கப்பலில் விஷவாயு கசிந்து இரண்டு வீரர்கள் பலி: கர்நாடகாவில் பரபரப்பு



  • காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாக். ரூ. 200 கோடி நிதி உதவி



  • தெலங்கானாவில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு பிரியர்கள் ஆய்வில் தகவல்



  • அரியானாவில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை பாஜ அரசு அதிரடி



  • வருகிற 21ம் தேதியன்று யோகா தின நிகழ்ச்சியில் 30 ஆயிரம் ராணுவத்தினர் பங்கேற்பு



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]