இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பெங்களூரை வீழ்த்தியது மும்பை இதுபோன்றுதான் விளையாட விரும்புகிறோம் மும்பை கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

4/21/2016 2:34:14 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

மும்பை: ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன் பின் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. ஹெட் 37 (24 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் கோஹ்லி 33 (30 பந்துகள், 3 பவுண்டரி), டிவில்லியர்ஸ் 29 (21 பந்துகள், 3 பவுண்டரி, 1 சிக்சர்), சர்ப்பராஸ்கான் 28 ரன் (18 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3, கருணல் பாண்ட்யா 2, மெக்கிளினகன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 171 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 62 (44 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்சர்), போலார்டு 40 (19 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்சர்), அம்பதி ராயுடு 31 (23 பந்துகள், 5 பவுண்டரி), பட்லர் 28 ரன் (14 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். இதன் மூலம் 5வது போட்டியில் விளையாடிய மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றி குறித்து ஆட்ட நாயகன் விருது வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இது போன்ற ஆட்டத்தைதான் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறோம். பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி பெங்களூர் அணியை 170 ரன்னுக்கு கட்டுப்படுத்தி விட்டனர்.

மிடில் ஓவர்களில் கருணல் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசினார். எங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். கடைசியில் பட்லர் நன்றாக விளையாடினார். அதை போலார்டு சிறப்பாக முடித்து விட்டார். அவரவர்களின் நாட்டு அணிகளுக்கு அவர்கள் மேட்ச் வின்னர்கள். அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சிறப்பாக விளையாடிய ராயுடுவுக்கும் பாராட்டுக்கள். டாப் ஆர்டரில் நன்றாக அடித்தளம் அமைக்க வேண்டியது அவசியம். பிட்ச் நன்றாக இருந்தது என்றார்.

மேலும் சில
  • யூரோ கோப்பை கால்பந்து வெற்றியுடன் துவக்கியது ஜெர்மனி உக்ரைனை வீழ்த்தியது



  • பரபரப்பான கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்



  • கோபா அமெரிக்கா கால்பந்து ஹைதியை வீழ்த்தியது ஈக்வடார் 19 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதிக்குள் நுழைந்தது



  • இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் கடும் போட்டி



  • யூரோ கோப்பை கால்பந்து தொடங்கியது ருமேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்



  • இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இலங்கை அணி பதிலடி



  • வழிநெடுகிலும் ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி உடல் அடக்கம்



  • யூரோ கோப்பை இன்று துவக்கம் ஜெர்மனி அணிக்கு விராட் கோஹ்லி ஆதரவு



  • கோபா அமெரிக்கா கால்பந்து உருகுவேக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது வெனிசுலா காலிறுதிக்கு முன்னேற்றம்



  • இலங்கையுடன் கடைசி டெஸ்ட் போர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி 279/6



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]