3 மொழி பாடகியானார் எமி
4/21/2016 2:31:10 PM
ரம்யா நம்பீஸன், லட்சுமி மேனன், திரிஷா, பிரியாமணி என பல நடிகைகள் சொந்த குரலில் பாட்டு பாடி தங்களது கைவரிசையை காட்டினர். அவர்களைத் தொடர்ந்து எமி ஜாக்ஸன் பாடகியானார். பிரபுதேவா இயக்கிய ‘சிங் இஸ் பிளிங்’ படத்துக்கு இசை அமைத்த மஞ்ச் முசிக், எமியை பாடகியாக்கி இருக்கிறார். பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் உருவாகும் ஆல்பத்திற்காக பாட உள்ளார் எமி. படப்பிடிப்பொன்றில் இருந்த எமியை தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வரும்படி மஞ்ச் அழைத்து பாடலை பாடச் சொல்ல தயக்கம் காட்டாமல் ஹம்மிங் செய்து பாட ஆரம்பித்துவிட்டார் எமி. இந்த பாடலின் இசை ஆல்பத்தில் மஞ்ச், எமி நடனம் ஆட உள்ளனர். பாடுவதற்கு கற்றுக்கொண்டது பற்றி எமி கூறும்போது ‘17 வயதாக இருக்கும்போது எனது தங்கையுடன் பள்ளியிலிருந்து காரில் வீடுதிரும்பும்போது நான் தான் காரை ஓட்டி வருவேன். அப்போது 90களில் பிரபலமான ஸ்பெஸ் கேர்ள்ஸ் ஆங்கில பாடல்களை பாடிக்கொண்டே வருவேன். மியூசிக் ஆல்பம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது’ என்றார்.