கார்த்தியுடன் கிளுகிளுப்பு காட்சி சாய் பல்லவி விலகல்
4/21/2016 2:30:50 PM
மணிரத்னம் இயக்க கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக தேர்வானார். படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் ஒருபக்கம் நடக்க ஸ்கிரிப்ட்டை பட்டை தீட்டி வருகிறார் மணிரத்னம். ஹீரோ, ஹீரோயினுக்குள் நெருக்கமான காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டதாக தெரிகிறது. அக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று சாய்பல்லவியிடம் இயக்குனர் கேட்டபோது தயங்கினார். இதையடுத்து சாய் பல்லவிக்கு பதிலாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சாய் பல்லவி விலகியது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். ‘பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. மணி சார் படத்திலிருந்து விலகி செல்வதற்கு யாருமே விரும்ப மாட்டார்கள். நான் மட்டும் அதைச் செய்வேனா? சாதனை இயக்குனரான அவருக்கு, வேடத்துக்கு எது சிறந்தது? யாரால் தோள் மீது சிறப்பாக தாங்கி செல்ல முடியும் என்பதை கணிக்க தெரியும். எனக்கு எது நன்றாக இருக்கும் என்பதும் அவருக்கு தெரியும். ஸ்கிரிப்ட்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம்பற்றி என்னிடம் மணிசார் கூறினார். அவரது தகுதிக்கு அப்படி விளக்கவே தேவையில்லை. அவரது தீவிர ரசிகை என்ற முறையில் மற்றவர்களைப்போல் அவரது படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்’ என்றார்.
can i take xyzal in the morning
canitake.net can i take xyzal in the morning