கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
4/21/2016 2:27:37 PM
ஸ்ரீபெரும்புதூர் : ஆரணி அடுத்த செய்யாறு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சவுந்தரராஜன் மகள் சந்திரலேகா (21). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இன்று காலையில், சக மாணவிகள், சந்திரலேகா அறைக்கு வந்தனர். அங்கு மின் விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தார் சந்திரலேகா. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கதறினர். உடனே, ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து, காதல் தோல்வியால் சந்திரலேகா தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.