வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை
4/21/2016 2:26:49 PM
பூந்தமல்லி: சென்னையை அடுத்த பூந்தமல்லி, புது தெரு சேர்ந்தவர் பிரபு (32). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (26). இவர்களுக்கு ரிதீஷ் (2) என்ற மகன் இருக்கிறார்.இந்நிலையில், ரிதீஷுக்கு நேற்று காலை உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து தனது வீட்டை பூட்டிவிட்டு, பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே தனியார் மருத்துவமனைக்கு ரிதீஷை சித்ரா அழைத்து சென்றார்.பின்னர் நேற்று மாலை இருவரும் வீடு திரும்பினர். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு சித்ரா அதிர்ச்சியடைந்தார்.அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் பிரபு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.