கள்ளக்காதலை கண்டித்ததால் சென்ட்ரிங் தொழிலாளி வெட்டி கொலை நெல்லை அருகே பயங்கரம்
4/21/2016 2:26:30 PM
நெல்லை: சீவலப்பேரி அருகே உள்ள பொட்டல் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாக்யராஜ் (35). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி ஜானகி (32). இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். நேற்று பாக்யராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவில் வீடு திரும்பவில்லை.இன்று காலை அவினாப்பேரி பஸ் நிறுத்தம் அருகே முள்புதரில் அவர், கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து சென்ற தாலுகா போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்யராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வல்லநாட்டை சேர்ந்தவர் சக்திவேல் (30). சென்ட்ரிங் தொழிலாளியான இவரும் கொலை செய்யப்பட்ட பாக்யராஜும் நண்பர்கள். பாக்யராஜ் வீட்டுக்கு சக்திவேல் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பாக்யராஜ் மனைவி ஜானகியுடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளகாதலாக மாறியது. இதையறிந்த பாக்யராஜ், இருவரையும் கண்டித்தார். இருப்பினும் அவர்களிடையே தொடர்பு நீடித்தது.கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சக்திவேல், ஜானகி வீட்டிற்கு வந்து அவருடன் தனியாக பேசிக் கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். பின்னர் இருவரையும் கையும்களவுமாக பிடித்தனர். பஞ்சாயத்தை கூட்டி இருவரையும் கண்டித்தனர். ஆனால் ஜானகி, எனக்கு கணவருடன் வாழ பிடிக்கவில்லை. சக்திவேலுடன்தான் செல்வேன் என்றார்.
இதுகுறித்து சீவலப்பேரி ேபாலீசில், பாக்யராஜ் புகார் செய்தார். அவரும் ஜானகியுடன் இனி வாழமாட்டேன் என்று கூறினார். இதனால் ஜானகி, கணவரை பிரிந்து உள்ளூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் நேற்றிரவு பாக்்யராஜ் வேலைக்கு சென்று திரும்பியபோது அவினாப்பேரி பஸ் நிறுத்தம் அருகே கும்பல் வழிமறித்து அவரை வெட்டி கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் பாக்யராஜ் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஜானகியிடம் விசாரணை நடக்கிறது. தலைமறைவான சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.
can i take xyzal in the morning
canitake.net can i take xyzal in the morning