இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தீவு திடலில் ஜெ. பொதுக்கூட்டத்தில் கட் அவுட், பேனர் வைத்த அதிமுகவினர் மீது வழக்கு ஐகோர்ட்டில் தேர்தல் அதிகாரி தகவல்

4/20/2016 3:24:38 PM
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கெஜ்ரிவால் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்: சதானந்த கவுடா அட்டாக் குஜராத்தில் சிங்கத்துடன் செல்பி எடுக்க தடை

சென்னை: தீவு திடலில் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டம் நடந்த போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பேனர் வைத்ததற்காக அதிமுகவினர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சென்னை தீவு  திடலில் கடந்த 9ம் தேதி அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். இதற்காக பல இடங்களில்  விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

இது தேர்தல் நடத்தை விதிகளுக்கும், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கும் எதிரானவையாகும். இது பற்றி தலைமை தேர்தல் அதிகாரியை கடந்த 8ம் தேதியே  போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். பின்னர், விதிகளை மீறி பேனர்கள் வைத்ததற்காக தேர்தல் சின்னம் விதிகளின்படி, அதிமுக சின்னமான இரட்டை  இலையை முடக்க வேண்டும் என்று கடந்த 10ம் தேதி மனு அனுப்பினேன். இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று  கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது,  ‘‘விதிகளுக்கு முரணாக விளம்பர பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’’ என்று தமிழக தலைமை தேர்தல்  அதிகாரிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை தேர்தல்  அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கடந்த 9ம் தேதி தீவுத்திடலில் அதிமுக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டம்  நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பொது இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கவில்லை. இது குறித்து புகார் வந்ததும், பேனர்களை  அகற்ற சம்பந்தப்பட்ட கட்சியினரிடம்  அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்களும் கடந்த 8ம் தேதி இரவு அவற்றை அகற்றினர். ஆனால், தீவுத்திடல் அருகேயுள்ள  சாலைகளில் பேனர்கள் அகற்றப்படவில்லை. இது ெதாடர்பாக அதிமுக நிர்வாகிகள் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என்று  கூறியுள்ளார்.

மேலும் சில
  • திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சுற்றிய ஆவடி மாணவர் மீட்பு



  • ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி சுருட்டப்பள்ளி அணையிலிருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு நீர் திறப்பு



  • வாலாஜாபாத் தாலுகாவில் விபத்துகளை தடுக்க தீயணைப்பு நிலையம் பொதுமக்கள் வலியுறுத்தல்



  • தக்காளி விலை கிடு கிடு உயர்வு



  • திருத்தணி முருகன் கோயிலில் கடைகள் ஏலம்: பின்வாங்கிய வியாபாரிகள்



  • தாம்பரம் தாலுகாவில் புரோக்கர்களின் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் புகார்



  • கிணற்றில் மூழ்கி சென்னை ஐடிஐ மாணவர் தம்பியுடன் பலி



  • நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் வீட்டுவசதி வாரிய பொருட்கள் ஜப்தி ஊழியர்கள் ஓட்டம்



  • தஞ்சை தேர்தல் ரத்து விவகாரம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக மோதல்



  • கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை



Facebook

Twitter

Aamir Khan on the issue of Punjab utta sensor, rajamavuli Flow
உட்தா பஞ்சாப் விவகாரம் சென்சார் மீது ஆமிர்கான், ராஜமவுலி பாய்ச்சல்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]