இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கொல்கத்தா அதிரடியில் பஞ்சாப் புஸ்... கம்பீருடன் கெமிஸ்ட்ரிதான் வெற்றிக்கு காரணம் ஆட்டநாயகன் உத்தப்பா உற்சாகம்

4/20/2016 2:56:43 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

மொகாலி: ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டம் மொகாலியில் நேற்று இரவு நடந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா ைநட் ரைடர்ஸ் அணிகள் ேமாதின. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷான் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 56 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தார். முரளி விஜய் 26 ரன் எடுத்தார். கேப்டன் மில்லர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கொல்கத்தா தரப்பில் ேமார்னே மோர்கல், சுனில் நரைன் தலா 2, உமேஷ்யாதவ், பியூஸ் சாவ்லா, யூசுப் பதான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய கொல்கத்தா 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா 28 பந்துகளில் 53 ரன்னும் (9 பவுண்டரி), கம்பீர் 34 ரன்னும் எடுத்தனர்.

வெற்றிகுறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், “நிச்சயமாக ஓபனிங் பார்ட்னர்ஷிப்தான் (கம்பீர்-உத்தப்பா இருவரும் 8.3 ஓவர்களில் 82 ரன்கள்) வெற்றிக்கான சாவியாக அமைந்தது. உத்தப்பா எங்களது வேலையை எளிதாக்கி விட்டார். தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என நினைக்கிறோம். மிடில் ஓவர்களில் சூர்யா, பாண்டே ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். நாங்கள் எங்கள் வீரர்களை நம்புகிறோம். சுனில் நரைனின் வேலையை எளிதாக்க வேண்டும் என நான் முன்னதாகவே கூறியுள்ளேன். அவருக்கு அழுத்தத்தை அளிக்க நாங்கள் விரும்பவில்லை. நரைனை தவிரவும் எங்கள் அணியில் தரமான பவுலர்கள் உள்ளனர். நரைன் நம்பிக்கையுடன் களமிறங்கினால், அவர் மிகவும் அபாயகரமானவராக இருப்பார்” என்றார்.

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் மில்லர் கூறுகையில், “துவக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து விட்டோம். மேலும் போதுமான ரன்களையும் குவிக்கவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை, நிறைய பவுண்டரிகளை வழங்கி விட்டோம். நிச்சயமாக கிடைத்த சில வாய்ப்புகளையும் தவற விட்டு விட்டோம். அதே நேரத்தில் சில பாசிடிவ்வான விஷயங்களும் உள்ளன. மார்ஷ் ஓரளவு ரன்களை குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களிடம் சில வியத்தகு வீரர்கள் உள்ளனர். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்” என்றார். ஆட்டநாயகன் விருது வென்ற உத்தப்பா கூறுகையில்,” நான் பேட்டிங் செய்த விதமும், அணியின் வெற்றிக்கு பங்களித்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கும், கம்பீருக்கும் நல்ல புரிதல் உள்ளது. இந்த புரிதல்தான் எங்களது வெற்றியின் ரகசியம். எங்களுக்கு இடையே புரிதலும், தோழமையும் சிறப்பானது “என்றார்.

மேலும் சில
  • யூரோ கோப்பை கால்பந்து வெற்றியுடன் துவக்கியது ஜெர்மனி உக்ரைனை வீழ்த்தியது



  • பரபரப்பான கட்டத்தில் லார்ட்ஸ் டெஸ்ட்



  • கோபா அமெரிக்கா கால்பந்து ஹைதியை வீழ்த்தியது ஈக்வடார் 19 ஆண்டுகளுக்கு பிறகு கால் இறுதிக்குள் நுழைந்தது



  • இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் கடும் போட்டி



  • யூரோ கோப்பை கால்பந்து தொடங்கியது ருமேனியாவை வீழ்த்தியது பிரான்ஸ்



  • இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட் இலங்கை அணி பதிலடி



  • வழிநெடுகிலும் ரசிகர்கள் மலர் தூவி அஞ்சலி குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி உடல் அடக்கம்



  • யூரோ கோப்பை இன்று துவக்கம் ஜெர்மனி அணிக்கு விராட் கோஹ்லி ஆதரவு



  • கோபா அமெரிக்கா கால்பந்து உருகுவேக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது வெனிசுலா காலிறுதிக்கு முன்னேற்றம்



  • இலங்கையுடன் கடைசி டெஸ்ட் போர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து அணி 279/6



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]