மும்பை அணி செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வேதனை
4/20/2016 2:56:07 PM
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்து, புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டி: ஒவ்வொரு போட்டியிலும் 30 ஓவர்கள் சிறப்பாக விளையாடுகிறோம். ஆனால் அது போதுமானது கிடையாது. போட்டியின் 40 ஓவர்களும் சிறப்பாக விளையாட வேண்டும். இது வரையிலான மும்பை அணியின் செயல்பாடுகள் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிராக பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றோம். ஆனால் மற்ற போட்டிகளில் பேட்டிங் சிறப்பாக இல்லை. 3வது வரிசையில் களமிறங்க கூடிய ஸ்பெஷலிஸ்ட் வீரர் எங்களிடம் இல்லை.
பட்லர் 5வது வீரராகவும், போலார்டு 5 அல்லது 6வது வீரராகவோ களமிறங்குகின்றனர். எங்களிடம் உள்ள ஒரே வாய்ப்பு ஹர்திக் பாண்ட்யாவை 3வது வீரராக களமிறக்குவதுதான். கொல்கத்தா அணிக்கு எதிராக பட்லர் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அவர் மேட்ச் வின்னிங் வீரர். பொதுவாக நடக்கும் விஷயங்களும் எங்களுக்கு எதிராக உள்ளது. சிம்மன்ஸ், மலிங்கா, போலார்டு ஆகியோர் காயமடைந்துள்ளனர். மலிங்காவுக்கு மாற்று வீரரை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே இன்று இரவு மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
can i take xyzal in the morning
canitake.net can i take xyzal in the morning