இஸ்தான்புல் கோப்பை டென்னிஸ் முதல் சுற்றில் ஷிமில்டோவா தோல்வி
4/20/2016 2:55:46 PM
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் இஸ்தான்புல் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் தொடர் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ஸ்லொவாகியாவின் அன்னா கரோலினா ஷிமில்டோவா, தகுதிச்சுற்று வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியை எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் ஷிமில்டோவா ஏராளமான தவறுகளைச் செய்தார். நேர்த்தியாக ஆடிய சக்காரி புள்ளிகளைக் குவித்தார். இதன் மூலம் சக்காரி 6-2, 6-3 என நேர் செட்களில் முதல் நிலை வீராங்கனையான ஷிமில்டோவாவை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை கரீன் நாப், தைபே வீராங்கனை சூ வீய் ஹெய்ஷை எதிர் கொண்டார். இதில், முதல் செட்டை, டை பிரேக்கரில் இழந்த ஹெய்ஷ், அடுத்த 2 செட்களையும் எளிதில் வென்றார். ஹெய்ஷ் 6-7(3), 7-5, 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார். பல்கேரிய வீிராங்கனை ஸ்வெட்லானா பிரான்கோவா 6-2, 6-2 என நேர் செட்களில் பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை வென்றார். டான்கா கோவினிக் 6-3, 6-3 என்ற செட்களில் ஜப்பான் வீராங்கனை கருமி நாராவை வீழ்த்தினார். உக்ரேன் வீராங்கனை லெசியா டொரன்கோ3-6, 4-6 என்ற செட் கணக்கில் ரொமேனி வீராங்கனை சொரனா சிரிஸ்டியாவிடம் தோல்வியடைந்தார்.