தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி
4/15/2016 2:23:06 PM
தாம்பரம்: மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதியன்று ஏராளமான வெடிபொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்பு துறையை சேர்ந்த 66 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.இதை நினைவுகூரும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் வரும் 20-ம் தேதி வரை தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.தாம்பரம் சானடோரியம் தீயணைப்பு துறை மாநில பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், தீயணைப்பு துறை வடக்கு மண்டல இணை இயக்குநர் விஜயசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பணியின்போது மரணமடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்,