அமெரிக்காவின் கன்சாஸ் பகுதி
4/9/2025 12:10:27 PM
அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த 35 வயது டெரெக் மிட்செல், 247 கிலோ எடை கொண்டவராக இருந்தார். தன்னுடைய அளவுக்கு அதிகமான உடல் எடையை வைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு 5 கி.மீ. ஓட்டப் பந்தயத்தில் 21 தடவை கலந்து கொண்டிருக்கிறார். 10 கி.மீ. ஓட்டப் பந்தயத்தில் 2 முறை பங்கேற்று இருக்கிறார். ‘’என்னுடைய சகோதரிதான் என் சாப்பாட்டுப் பழக்கத்தை மாற்றினார். என்னைக் கட்டாயப்படுத்தி உடற்பயிற்சி செய்ய வைத்தார். 5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளவும் வைத்தார். முதல் ஓட்டத்தில் கலந்துகொண்ட பிறகு எனக்கே ஆர்வம் அதிகரித்துவிட்டது. என் எடையைத் தூக்கிக்கொண்டு நான் ஓடுவது பலரையும் பாராட்ட வைத்தது. என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தினார்கள். 20வது ஓட்டப்பந்தயத்தை நான் முடித்தபோது, 40 கிலோ குறைந்திருந்தேன். உடல் எடை அதிகம் கொண்ட மிக மெதுவான மனிதனான நான், இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறேன். என்னுடைய எடை குறைப்பு முயற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் பல்வேறு பத்திரிகைகளை என்னைத் தேடி வரவழைத்துள்ளன.