மற்றொரு வாலிபருடன் ஆட்டம் காதலியை கத்தியால் குத்திய காதலன்
3/23/2016 2:56:35 PM
ஆலந்தூர்: சென்னை பழவந்தாங்கல், பக்தவத்சலம் நகரை சேர்ந்த ஆங்கிலோ-இந்தியர் ஜான் (19, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். அதேபோல் பரங்கிமலை பகுதியை சேர்ந்த பெண் சோபியா (18, பெயர் மாற்றப்பட்டு உள்ளது).இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரும் உறவினர் போல் பழகி வந்தனர். இந்நிலையில், தனது மற்றொரு ஆண் நண்பருடன் சோபியா, ‘பப்’புக்கு போய் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து ஜானுக்கு தகவல் கிடைத்ததும், சோபியாவின் வீட்டுக்கே சென்று வாய்த் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.
‘நண்பர் என்ற முறையில்தான் அவருடன் பப்புக்கு சென்றேன்’ என்று சோபியா கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜான், கத்தியால் குத்திவிடுவேன் என்று சோபியாவிடம் கத்தியை காட்டி மிரட்டினார்.சோபியா கையால் கத்தியை தடுத்தபோது, அவரது கழுத்தில் கீறல் விழுந்து ரத்தம் கொட்டியது. அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். பரங்கிமலை காவல் நிலையத்தில் ஜான் மீது புகார் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து போலீசார், ஜானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.