வங்கி ஊழியர்கள் 11வது மாநில மாநாடு கோவையில் 25ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது
3/23/2016 2:54:27 PM
சென்னை: வங்கி ஊழியர்களின் 11வது மாநில மாநாடு கோயம்புத்தூரில் வரும் 25, 26, 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.இது தொடர்பாக சி.பி.கிருஷ்ணண் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு வரும் 25, 26, 27ம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இயங்கும் பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் முதல் கட்டமாக 25ம் தேதி பெண் ஊழியர் சிறப்பு மாநாடு நடைபெறும். மாநாட்டில், வீரப்பமொய்லி கமிட்டி அறிவிப்புபடி 27 பொதுத்துறை வங்கிகளில் 4 லட்சம் கோடி வராக்கடன் இருக்கிறது. பெரும் முதலாளிகளிடம் இருந்து இந்த பணத்தை வசூலிக்க சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.வராக்கடன்களை திரும்ப செலுத்தாதவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். இத்தகைய பெரும் முதலாளிகளுக்கு உதவியாக இருக்கும் ஆடிட்டர்கள், வக்கீல்கள் ஆகியோரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.