அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி
3/23/2016 2:54:02 PM
மீனம்பாக்கம்: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணிக்காக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வரவில்லை. வேறு எந்த கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசவும் வரவில்லை. என் துறை சம்பந்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ளேன். 2014 பாராளுமன்ற தேர்தலின் போது, யாரும் எதிர்பாராத வண்ணம், நரேந்திர மோடி தலைமையிலான பாஜ தனிப்பெரும் கட்சியாக 278 தொகுதிகளில் அமோக வெற்றியை பெற்றது. தற்போது, மத்தியில் ஒரு நிலையான நல்ல ஆட்சியையும் மோடி தலைமையில் பாஜ அரசு அமைத்துள்ளது.அதேபோல் தமிழக சட்டசபை தேர்தலிலும் யாரும் எதிர்பாராத விதத்தில் பாஜ, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுக்கும். மேலும் நடைபெற 5 மாநில சட்டசபை தேர்தலிலும் பாஜ முனைப்போடு செயல்பட்டு நல்ல வெற்றியை அடையும். இதில் எந்தவித சந்தேகத்துக்கும் இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.