மீண்டும் சர்ச்சையில் அப்ரிடி
3/23/2016 2:20:48 PM
போட்டி துவங்குவ தற்கு முன்பாக, டாஸ் போடப்பட்ட போது, பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா, அப்ரிடியை பேட்டி கண்டார். அப்போது அப்ரிடி கூறுகையில், காஷ்மீரில் இருந்து நிறைய மக்கள், எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக மொகாலி வந்துள்ளனர். இதேபோல் கொல்கத்தாவில் (இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது) ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிக அன்பு காட்டப்படுகிறது என அப்ரிடி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது அதேபோல் அப்ரிடி இவ்வாறு பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது