திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ. 3 கோடி காணிக்கை
3/22/2016 2:24:38 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 15 மணிநேரத்தில் 48 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காணிக்கை உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 15 மணிநேரத்தில் 48 ஆயிரத்து 518 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 7 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்தும், மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்றவர்கள, ரூ. 300, ரூ. 50க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ. 3.05 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.