இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் 9ம் சுற்றில் ஆனந்த் வெற்றி

3/22/2016 2:20:48 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

மாஸ்கோ: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9ம் சுற்றில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.நடப்பு உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன், உலக சாம்பியன்ஷிப்பில் மோதும் போட்டியாளரை நிர்ணயிப்பதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. 9ம் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன.

அமெரிக்க வீரர் ஹிகாரு நகாமுரா, செர்ஜி கார்ஜாகினுடன் மோதினார். குயின்ஸ் இந்தியன் டிபன்ஸ் முறையில் ஆடப்பட்ட இந்த ஆட்டம் 44 நகர்த்தல்களுக்கு பின் டிராவில் முடிவடைந்தது. கிராண்ட் மாஸ்டர் வாசெலின் தாபாலோவ், பீட்டர் ஸ்விட்லர் இடையிலான ஆட்டத்தில் 47 நகர்த்தல்களுக்கு பின்னும் முன்னேற்றம் காணப்படாததால் இருவரும் டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். நெதர்லாந்து வீரர் அனீஷ் கிரி, பாபியானோ கரூணா இடையிலான மோதலில் இருவரும் தந்திரமான நகர்த்தல்களை மேற்கொண்டதால் ஆட்டம் நீண்ட நேரம் நீடித்தது.

96 நகர்த்தல்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு தென்படாததை அடுத்து டிராவுக்கு இருவரும் ஒப்புக் கொண்டனர். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனை எதிர் கொண்டார். வெள்ளைக்காய்களுடன் ஆட்டத்தை துவக்கிய ஆனந்த் இத்தாலிய முறையில் ஆடினார். துவக்கத்திலேயே ஆனந்துக்கு சற்று சாதகமான சூழ்நிலை தென்படத் தொடங்கியது. பின்னர், தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடி ஆரோனியனின் கருப்பு காய்களை வெட்டி வீழ்த்தத் துவங்கினார். 66வது நகர்த்தலின் போது ஆரோனியன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் 5.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை செர்ஜி கார்ஜாகினுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் சில
  • ஒலிம்பிக் துளிகள்



  • ராகுலை தொடர்ந்து ரஹானே சதம்; வெற்றிப்பாதையில் இந்தியா



  • ஜமைக்காவிலும் வெற்றி நடை - ராகுல் சதத்தால் இந்தியா 358/5



  • புரோ கபடி லீக்; பாட்னா சாம்பியன்



  • ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் வீராங்கனைகள்



  • கோபிசந்தின் சிஷ்யர்-கிடாம்பி ஸ்ரீகாந்த்



  • நியூசிலாந்து ஆதிக்கம்



  • புரோ கபடி லீக் ஜெய்ப்பூர், பாட்னா பைனலுக்கு தகுதி



  • அமெரிக்காவில் ஆக. 27, 28ல் இந்தியா-வெ.இ. டி.20 போட்டி?



  • 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் இந்திய சவாலை வெ.இண்டீஸ் எதிர்கொள்ளுமா ? விஜய்க்கு பதில் ராகுல் களம் இறங்குகிறார்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]