‘கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துறாங்க’ கேத்ரின் தெரசா திடீர் வருத்தம்
3/22/2016 2:20:27 PM
‘மெட்ராஸ்’ படத்தில் குடிசைப்பகுதி பெண்ணாக நடித்து கவர்ந்த கேத்ரின் தெரசா அடுத்து நவநாகரீக உடைகளில் கதகளி, கணிதன் படங்களில் நடித்தார். போட்டி நடிகைகள் பலர் இருந்தபோதும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வரும் அவர் திடீர் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். அப்படி என்ன சோகம்?என்றபோது பதில் அளித்தார்.என்னை அழகாக காட்டவே தற்போது இயக்குனர்கள் முயல்கிறார்கள். மாடர்ன் உடை, இறுக்கமான உடைகள் என காஸ்டியூமில் என்னை கவர்ச்சியாக காட்ட வைக்கின்றனர்.
இதனால் எனக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் வாய்ப்பு வரவில்லை. இதுதான் எனக்கு வருத்தம். ‘கதகளி’ படம் தமிழில் வெளியானபிறகு தெலுங்கிலும் பெரிய அளவில் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது. எந்த மொழியில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்கிறோம் என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதுபோன்ற வாய்ப்புகளுக்காகஎதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இவ்வாறு கேத்ரின் தெரசா கூறினார்.