இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

சினிமா தகவல் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்

3/21/2016 3:42:56 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை' திரைப்பட துறையில் தகவல் களஞ்சியம் என புகழப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம் அடைந்தார்.தமிழ் சினிமாவில் தகவல் களஞ்சியம் என்று புகழப்படுபவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் (89). சென்னையிலுள்ள ஒரு தனியார்  மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார். வயது முதிர்வு மற்றும் நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த  அவர், சிகிச்சை பலனின்றி இன்று பகலில் மரணம் அடைந்தார்.

பழங்கால ஊமைப் படங்கள் மற்றும் நிகழ்கால தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன்,  சினிமா மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய பல அரிய தகவல்களை ரசிகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் திரட்டி வைத்திருந்தார்.  சுருக்கமாக, திரையுலகின் விக்கிபீடியாவாக அவர் விளங்கினார்.

1958ல் ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் திரைப்பட மக்கள் தொடர்பாளராக எம்.ஜி.ஆர் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட  பிலிம் நியூஸ் ஆனந்தன், அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,500 படங்களுக்கு மேல் பி.ஆர்.ஓ ஆகப் பணியாற்றி இருக்கிறார்.  அவர் திரட்டி வைத்திருந்த பல அரிய சினிமா மற்றும் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை, ‘சாதனை  படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்ற பெயரில் மிகப் பெரிய ஆவணப் புத்தகமாக, தமிழக அரசு நிதியுதவியுடன்  வெளியிடப்பட்டது. 1991ல் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

மரணம் அடைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு மனைவி சிவகாமி, மகன்கள் பி.ஆர்.ஓ டைமன்ட் பாபு, ரவி, மகள்கள் கீதா,  விஜயா உள்ளனர். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். நாளை பிலிம் நியூஸ் ஆனந்தனின்  இறுதிச்சடங்கு சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகினர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா



  • ரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்



  • ‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு



  • வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா



  • நடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை



  • குப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்



  • போலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று? : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா



  • விஷால் - சிவகார்த்திகேயன் மோதல்



  • ‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது



  • பிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]